ஃபெங்கல் புயல்... மக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு அறிவுறுத்தல்!
ஃபெங்கல் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வுகள் நடத்தப்பட கூடாது. ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.
புயல் கரையை கடக்கும்போது ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும். கனமழை, புயல் காற்றுக்கு வாய்ப்பு உள்ளதால் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்த்து, பாதுகாப்பாக வீடுகளில் இருக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
கட்டுமான தளங்களில் உள்ள கிரேன்கள், உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள், விளம்பர போர்டுகள் ஆகியவை சாய்ந்தும், விழுந்தும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அவற்றை கீழே இறக்கி வைக்க வேண்டும். அல்லது உறுதியாக நிலைநிறுத்த வேண்டும் என்று தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மை ஆணையம் குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!