சர்ச்சையை கிளப்பிய விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை!

 
விநாயகர் சதுர்த்தி

 தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் செப்டம்பர் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இது குறித்து தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் குறித்து பின்வருமாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்கள், அமைப்பாளர்கள், செய்ய வேண்டிய, செய்யக்கூடாத பணிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், சென்னை உயர்நீதிமன்றம்  மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் மூலம்  பெறப்படும் அறிவுறுத்தல்கள் பொதுமக்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் செய்தி வெளியீடு வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.  விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர்கள், அமைப்பாளர்கள், சிலை செய்வோர் மற்றும் பொதுமக்களுக்கு மட்டுமே உரிய அறிவுறுத்தல்கள் ஆகும்.

ஒரு சில மாவட்டங்களில் தவறான புரிதலின் அடிப்படையில் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு பள்ளிகளுக்கு வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள், அரசின் ஆணைகளுக்கு முற்றிலும் முரணானது. இதனையடுத்து  ஒரு சில மாவட்டங்களில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு தவறான சுற்றறிக்கை அனுப்பியதற்கு பொறுப்பான அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web