சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த கும்பல்.. 6 பேர் அதிரடியாக கைது!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் அப்பையநாயக்கன்பட்டி காவல் துணை ஆய்வாளர் மனோகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தனியார் பட்டாசு தொழிற்சாலைக்கு பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் காணப்பட்டதால், போலீசார் உடனடியாக அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, பட்டாசு தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் காட்டுப் பகுதியில் இருப்பது தெரியவந்தது. சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் (வயது 53), மீனாட்சி சுந்தரம் (52), நாகலட்சுமி (46), சுமன்குமார் (52), வீரராஜமணி (44), நைனார்சாமி (44) ஆகிய 6 பேர் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குண்டலகுத்தூர் கிராம நிர்வாக அதிகாரி மலை பாண்டியன் அளித்த புகாரின் அடிப்படையில், அப்பையநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!