இளம் பெண் கூட்டு பலாத்காரம்... காவலர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

 
ஆந்திரா
 


ஆந்திர மாநில இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான இரு காவலர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாய், மகள் இருவரும் அண்ணாமலையாரை தரிசிக்க சென்றபோது, கடந்த செப்டம்பர் 30-ம் தேதி இரவு வாழைக்காய் ஏற்றிய வாகனத்தில் திருவண்ணாமலை வந்தனர்.

அங்கு ரோந்து பணியில் இருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் ஆகியோர், அந்த இருவரையும் தனியாக அழைத்துச் சென்று, ஆளில்லாத இடத்தில் தாய் கண்முன்னே இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மாணவி பாலியல் இளம்பெண் பலாத்காரம் உல்லாசம்

பின்னர், பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு சென்ற காவலர்கள் மீது பொதுமக்கள் கொந்தளித்தனர். வழியாகச் சென்றவர்கள் பெண்ணை மீட்டு, உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.இது தொடர்பாக திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இரு காவலர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர், அவர்களை பணியிலிருந்து நீக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவிட்டார்.

போலீஸ்

இந்நிலையில், இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய சிபிஎஸ்பி சுதாகர் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகியோருக்கு குண்டர் சட்ட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்திலும், மாநில காவல்துறையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!