கட்டுப்பாட்டை இழந்த லாரி... ஏரியில் மிதக்கும் சமையல் சிலிண்டர்கள்!

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் இருந்து 357 சமையல் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி திருவண்மாலை மாவட்டம் செய்யாறு அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவல் அறிந்து வந்த போலீசார், அந்த பகுதி மக்கள் உதவியுடன் படுகாயங்களுடன் கிடந்த லாரி ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் ஏரியில் தண்ணீரில் மிதந்து வந்த சமையல் எரிவாயு உருளைகளை மீட்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!