ஓரினச்சேர்க்கையாளர் திருமண மசோதா .. ஒப்புதல் அளித்தார் தாய்லாந்து மன்னர்!
தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை தம்பதிகள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்துகொள்ளும் சட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது. தாய்லாந்து நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பெரும்பான்மை ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து, தற்போது அந்த மசோதாவுக்கு அந்நாட்டு மன்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில், தாய்லாந்தில் ஜனவரி முதல் ஓரினச்சேர்க்கையாளர்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளலாம். இதன் மூலம் தாய்லாந்து, தைவான் மற்றும் நேபாளத்திற்கு பிறகு ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய ஆசியாவில் மூன்றாவது நாடாக இது திகழ்கிறது.
இந்த முடிவு தாய்லாந்தில் உள்ள LGBTQ+ சமூகத்தினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக சமத்துவம் மற்றும் அனைவருக்கும் சம உரிமைக்கான கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. இது ஆசியாவின் மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமையும் என்றும் அங்குள்ள LGBTQ+ சமூகத்திற்கு நம்பிக்கையை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!