பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்... அல்வா கிண்டிய நிர்மலா சீதாராமன்!

 
அல்வா


 
2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கும்  நிலையில், பட்ஜெட் பணிகளை இறுதி செய்யப்பட்டுள்ளன.இதனை தெரிவிக்கும் வகையில்  அல்வா கிண்டும் நடைமுறையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கொண்டார்.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது.  குடியரசுத் தலைவரின் உரையுடன் தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில்  பிப்ரவரி 1ம் தேதி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்நிலையில் பட்ஜெட் தயாரிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  இதனையடுத்து நாடாளுமன்ற வளாகத்தின் நார்த் பிளாக்கில் அல்வா கிண்டும் நடைமுறையை நிர்மலா சீதாராமன் நேற்று மேற்கொண்டார். பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் அல்வா வழங்கப்பட்டது.  

அல்வா


கடந்த 1980களிலிருந்து இந்த அல்வா கிண்டும் நடைமுறை பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இது குறித்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.  ஆனால், இந்த ஆண்டு எந்த புகைப்படமும் வெளியாகவில்லை. இந்த நிகழ்ச்சியில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் நிதிச் செயலர் துஹின் காந்தா பாண்டே உட்பட பல  மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்வதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. 

நிர்மலா சீதாராமன் அல்வா


பொதுவாக பட்ஜெட் தயாரிக்கப்படும்போது அது குறித்த தகவல்கள் வெளியில் கசிந்துவிடாமல் இருக்க தயாரிப்பில் ஈடுபடும் அனைவரும் நார்த் பிளாக்கில் உள்ள பெரிய கட்டிடத்தில் வைத்து லாக் செய்யப்படுவார்கள். அவர்களுக்கு செல்போன்  கூட அனுமதி கிடையாது. பட்ஜெட் அச்சிடப்பட்டு முடிக்கப்படும்போது, அதில் ஈடுபட்ட அனைவரையும் கௌரவிக்கும் வகையில் இந்த அல்வா தயாரிப்பு நடைமுறை பின்பற்றப்படுகிறது.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இதுவாகும். 3வது முறை பாஜக ஆட்சியை பிடித்தபிறகு உருவாகும் பட்ஜெட் இதனால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதன்படி பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணிக்கு  நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஜனவரி 31ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டம் பிப்ரவரி 14ம் தேதியுடன் முடிவடைந்து  மீண்டும் மார்ச்10ம் தேதி கூட்டத்தொடர் தொடங்குகிறது  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web