இந்தியாவிலேயே முதன் முறையாக உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்டம்... இன்று முதல் அமல்!

இந்தியாவிலேயே முதன்முறையாக இன்று முதல் உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வருகிறது. திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை ஆகியவற்றில் ஒரே முறையை பின்பற்றும் வகையில் சட்டம்.இது குறித்து பாஜக 2022 தேர்தலில் வாக்குறுதி அளித்திருந்த நிலையில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமலுக்கு வருகிறது.உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுவிட்டன.
இச்சட்டம் இன்று ஜனவரி 27ம் தேதி திங்கட்கிழமை முதல் அமல்படுத்தப்பட உள்ளது. சமூகத்தில் சீரான தன்மையை கொண்டுவந்து, குடிமக்கள் அனைவருக்கும் சமமான உரிமைகள் மற்றும் பொறுப்புகளை இச்சட்டம் உறுதி செய்யும். வளா்ச்சியடைந்த, ஒழுங்கமைக்கப்பட்ட, நல்லிணக்கமான, தற்சாா்பு கொண்ட தேசத்தைக் கட்டமைக்க பிரதமா் மோடி நடத்திவரும் மாபெரும் ‘வேள்வியில்’ ஓா் அா்ப்பணமே எங்கள் மாநிலத்தின் பொது சிவில் சட்டம் என முதல்வா் தாமி குறிப்பிட்டுள்ளாா். உத்தரகாண்ட்டில் அமலாகும் பொது சிவில் சட்டத்தை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு அஸ்ஸாம் உட்பட பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்கள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பொது சிவில் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் :
உத்தரகாண்ட்டில் பழங்குடியினா் தவிா்த்து பிற மக்கள் அனைவருக்கும் பொது சிவில் சட்டம் பொருந்தும். இச்சட்டத்தின்படி, திருமணப் பதிவு மட்டுமன்றி திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்பவர்களும் அரசிடம் முறையாகப் பதிவு செய்து கொள்வது கட்டாயமாகும். இணையவழியில் இப்பதிவை மேற்கொள்ளலாம். விவாகரத்துக்கான காரணங்கள், மறுமணம், ஜீவனாம்சம் தொடா்பாக பொது விதிமுறைகளை உறுதிசெய்யும் இச்சட்டம், பலதார மணம் மற்றும் ஹலாலா நடைமுறையை தடை செய்கிறது. பாலின சமத்துவத்தை முக்கிய அம்சமாக கொண்ட இச்சட்டம், ஆண்கள்-பெண்களுக்கு ஒரே போன்ற குறைந்தபட்ச திருமண வயது, ஆண்-பெண் குழந்தைகளுக்கு சமமான சொத்துரிமையையும் உறுதி செய்கிறது. செல்லுபடியாகாத திருமணத்தில் பிறந்த குழந்தைகளையும் சட்டப்பூா்வ வாரிசாக கருத வழிவகை செய்வதோடு, உயில் தயாரிப்பு நடைமுறைகளையும் எளிதாக்கி விடுவது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!