மகனுக்கு ’ ஆப்பிள் ஐபோன் 16’ பரிசளித்த குப்பை வியாபாரி!

 
ஐபோன்

 சமீபத்தில் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம்  ஐ-போன் 16 சீரிஸ் மொபைலை  அறிமுகம் செய்தது. அன்றைய தினம் அதிகாலை முதலே ஷோ ரூம் வாசலில் இளைஞர்கள் அதனை வாங்க வரிசையில் காத்திருந்தனர்  இந்நிலையில், குப்பை வாங்கி விற்கும் ஒரு வியாபாரி தனது மகன் படிப்பில் வெற்றி பெற்றதற்காக  ரூ. 1.5 லட்சம் மதிப்புடைய ஐ-போன் 16 மொபைலை பரிசளித்துள்ளார்.

இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகியது.  குப்பை வியாபாரி  தனக்கென ரூ. 85,000 மதிப்புடைய ஐ-போன் வாங்கிக் கொண்டார். பிறகு அவர் தனது மகனை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த விலை உயர்ந்த போனை வாங்கி பரிசளித்ததாக தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் ஐபோன் செல்போன் மொபைல்

மகன் சிறப்பாக படித்ததை பாராட்டும் வகையில்  பொருளாதார நிலையை மீறியும் இந்த பரிசை அளித்திருப்பதாகக் கூறியுள்ளார்.  இவரின்  நெகிழ்ச்சியான  இந்த தருணத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அத்துடன் அவரின் நெகிழ்ச்சியான வார்த்தைகளுக்கு  நெட்டிசன்கள் பாராட்டுக்களை பதிவிட்டு வருகின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web