கோவிலுக்கு வந்த சிறுமிகளிடம் அத்துமீறல்.. 70 வயது பூசாரி போக்சோவில் அதிரடியாக கைது!
தேனி பெரியகுளம் வடகரை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பகவதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு அர்ச்சகராக திலகர் (70) பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (செப்டம்பர் 25) மாலை கோவில் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவர்கள் 2 பேருக்கும், 9 வயது சிறுமிகளுக்கும் இனிப்பு வழங்கினார்.
பின்னர் கோவிலுக்குள் சென்ற சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒரு சிறுமி மட்டும் பீதியடைந்து கோவிலை விட்டு வெளியே ஓடி வந்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து சிறார்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோவில் முன்பு திரண்டனர்.
இதனால் பயந்துபோன திலகர் கதவைப் பூட்டிவிட்டு கோவிலுக்குள் பதுங்கியிருந்தார். தகவலின் பேரில் பெரியகுளம் வடகரை போலீசார் கோயிலுக்குள் சென்று திலகரிடம் விசாரணை நடத்தினர். சிறுவன் மற்றும் சிறுமியிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து திலகர் இன்று (செப்டம்பர் 26) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!