கண்ணாடி பாலம், லேசர் வெளிச்சத்தில் ஜொலிக்கும் வள்ளுவர்... குமரியில் குவியும் சுற்றுலா பயணிகள்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலில் கம்பீரமாக ஓங்கியுயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை இரவு நேரத்திலும் லேசர் வெளிச்சத்தில் வண்ணமயமாக ஜொலித்து வருகிறது. குமரியில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் இரவு நேரத்திலும் வண்ணத்தில் ஜொலிக்கும் திருவள்ளுவரை கடற்கரையில் கூட்டமாக நின்று பார்த்து ரசித்து செல்கின்றனர்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி கூண்டு பாலத்தை வருகிற டிசம்பர் 30ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாட்டத்திற்காக கன்னியாகுமரி களைகட்டியுள்ள நிலையில், கடல் நடுவே திருவள்ளுவர் சிலை இரவு நேரத்தில் ஒளிரும் வகையில் லேசர் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
லேசர் ஒளி வெள்ளத்தில் திருவள்ளுவர் சிலை இரவில் பச்சை, மஞ்சள், நீலம், சிகப்பு, ஊதா என பல வண்ணங்களில் மிளிர்கிறது. சிலை முழுவதும் மாறி மாறி ஒரே நிறத்திலும், ஒரே நேரத்தில் சிலையில் பல வண்ணங்களும் வரும் வகையில் லேசர் ஒளி அமைக்கப்பட்டுள்ளது. இதை கடற்கரையில் கூட்டமாக நின்று சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!