Gmail, Youtube சேவைகள் நிறுத்தம்! பயனர்கள் அதிர்ச்சி!

 
Gmail, Youtube சேவைகள் நிறுத்தம்! பயனர்கள் அதிர்ச்சி!

இன்று உலகமே மொபைலில் உள்ள சமூக வலைதளங்களில் தான் பொழுது போக்குவது மட்டுமல்ல இவைகளின்றி எந்த வேலையும் நடைபெறாது என்ற அளவுக்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. வீட்டுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் முதல் சாப்பாடு ஆர்டர் செய்வது வரை அனைத்தும் மொபைலிலேயே செய்து விட முடியும்.

Gmail, Youtube சேவைகள் நிறுத்தம்! பயனர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில் கூகுள் நிறுவனம் சில ஆண்ட்ராய்டு போன்களில் யூடியூப், ஜிமெயில், கூகுள் மேப்ஸ் போன்ற சேவைகளை செப்டம்பர் 27ல் நிறுத்த இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
பழைய ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. ஆண்ட்ராய்டின் பழைய பதிப்பில் ஜிமெயில், யூடியூப், கூகுள் மேப்ஸ் போன்ற பல முக்கிய பயன்பாடுகள் நிறுத்தப்பட உள்ளன.
ஏற்கனவே பழைய ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் வேலை செய்வதில்லை.

Gmail, Youtube சேவைகள் நிறுத்தம்! பயனர்கள் அதிர்ச்சி!

அதன்படி டிசம்பர் 2010 ல் அறிமுகப் படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு 2.3 ன் சேவைகளை நிறுத்திவிட கூகுள் முடிவு செய்துள்ளது.இவர்கள் மேலும் தொடர்ந்து அதே மொபைலை பயன்படுத்தும் பட்சத்தில் தங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் உள்நுழைய முயற்சிக்கும் பயனர்கள், பயனர்பெயர், மற்றும் கடவுச்சொல் பிழைகள் ஏற்படலாம்.

தகவல்கள் சரியாக இருந்தாலும், பிழையாகவே காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், யூடியூப், கூகுள் பிளே ஸ்டோர், கூகுள் மேப்ஸ், ஜிமெயில், கூகுள் கேலெண்டர் போன்ற கூகுள் ஆப்களும் வேலை செய்வதை நிறுத்திவிடக் கூடும்.

Gmail, Youtube சேவைகள் நிறுத்தம்! பயனர்கள் அதிர்ச்சி!


இந்த பயன்பாடுகளை மீண்டும் பெற ஆண்ட்ராய்டு 3.0 க்கு மாற வேண்டும். புதிய போன் வாங்க முடியாதவர்களுக்காக கூகிள் ஒரு சிறிய பயன்பாட்டை வழங்குகிறது. ஆண்ட்ராய்டில் பிரௌசரை பயன்படுத்தி சில தகவல்களை திரும்பப் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web