2018 -இல் அரெஸ்ட் செய்யப்பட்ட ஞானசேகரன்.. அடுத்தடுத்து வெளியான குற்ற பின்னணி!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை ஞானசேகரன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. சென்னையில் பிரியாணி கடை நடத்தி வரும் இவர், வியாபாரத்தை முடித்துக் கொண்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குச் சென்று தனிமையில் இருந்த காதலர்களிடம் பணம் பறித்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் மீது திருட்டு, கொள்ளை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஞானசேகரன் மூன்று பெண்களுடன் வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில் வரிசையாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், ஆள் கடத்தல் வழக்கில் பயங்கர ஆயுதங்களுடன் ஞானசேகரன் கைது செய்யப்பட்டதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டில், அவரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து டைல்ஸ் கடை உரிமையாளரை மிரட்டி கடத்திச் சென்று அவரது குடும்பத்தினரிடம் ரூ.25 லட்சம் கேட்டுள்ளனர். அவரது குடும்பத்தினர் ரூ.12 லட்சம் கொடுத்தபோது, மேலும் ரூ.13 லட்சம் கொடுத்தால் மட்டுமே விடுவிப்பதாகவும், இல்லையேல் கொன்று விடுவதாகவும் கூறினார்.
இதையடுத்து டைல்ஸ் கடை உரிமையாளரின் உறவினர்கள் போல் செயல்பட்டு ஞானசேகரன் கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் திண்டிவனம் போலீசார் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். அப்போது, அவரிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எப்படி சுதந்திரமாக நடமாடுகிறார், எப்படி பலத்த பாதுகாப்புடன் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!