கோவா கேளிக்கை விடுதியில் கோர தீ விபத்து… 25 பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

 
kova
 

கோவா மாநிலத் தலைநகர் பனாஜி அருகே உள்ள அர்புரா கிராமத்தில் செயல்பட்டு வந்த பிரபல கேளிக்கை விடுதியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பிரபல சுற்றுலா தலமாக விளங்கும் இந்த கடற்கரை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 25 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தீ விபத்தில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கேளிக்கை விடுதியின் சமையல் அறையில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்ததாலேயே தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. திடீரென பரவிய தீ காரணமாக, அங்கிருந்தவர்கள் தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். “கோவாவின் அர்புராவில் ஏற்பட்ட தீ விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் நான் துணை நிற்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். இந்த விவகாரம் குறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்துடன் பேசியுள்ளேன். மாநில அரசு தேவையான உதவிகளை செய்து வருகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!