ரூ60,000யை நெருங்கியது தங்கம் விலை... சவரனுக்கு ரூ.480 உயர்வு!

 
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!


தங்கம் விலை இன்று தொடர்ந்து 4வது நாளாக உயர்ந்துள்ளதால் தை மாத சுபமுகூர்த்த தினங்களில் திருமணங்களை திட்டமிட்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

தங்கம்

சென்னையில் இன்று காலை நேர வணிகம் தொடங்கியதுமே ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.59,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றுமுன்தினம் ஒரு சவரன் தங்கம் ரூ.58,720-க்கு விற்பனையாகி வந்த நிலையில் நேற்று மீண்டும் ரூ.59,000யை எட்டியது.

தங்கம்

போர் நிறுத்தம் போன்ற காரணங்களால் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலையில் அதிர்ச்சியளிக்கும் விதமாக கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.480 உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியளித்தது.

இன்னும் ஓரிரு நாட்களில் தங்கம் விலை ரூ.60 ஆயிரத்தைத் தொட்டு புதிய உச்சத்தை எட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web