தங்கம் விலை மீண்டும் உயர்வு... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

 
தங்கம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை  தங்கம் முதலீடாகவும், உணர்வுப்பூர்வமான மதிப்பாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக விலையில் மாற்றமில்லாமல் இருந்தாலும், நீண்டகால அடிப்படையில் விலை உயரலாம் என  முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.   மற்ற நாடுகளை விட இந்திய மக்களே தங்கத்தை போட்டி போட்டு வாங்குகிறார்கள்.

இதன் காரணமாகவே தங்கத்தின் விலை அதிகரித்தாலும் நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக விஷேச நாட்கள், திருமண நிகழ்விற்கு அணிந்து செல்ல அதிகளவு மக்கள் விரும்புவார்கள். இதன் காரணமாகவும் தங்க நகைகளை கையிருப்பில் இருந்தாலும் அவசர தேவைக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் கூட தங்கத்தை வாங்கி வைக்க விரும்புகின்றனர். அதே போல் பெண் குழந்தைகளின் திருமண சேமிப்பாகவும் தங்கத்தை வாங்குகின்றனர் .  

தங்கம்

தங்கத்தின் விலையானது கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.40,000 அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்க அதிபர் தேர்தலைத் தொடர்ந்து அமெரிக்க டாலரில் ஏற்பட்ட மாற்றம் தங்கம் விலையின் போக்கு மொத்தமாக மாறியுள்ளது.

தங்கம்

இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலையானது ஏற்றமாகவே இருந்து வருகிறது. கடந்த 3 நாட்ங்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய விலை நிலவரப்படி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ10 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7,225க்கும், சவரனுக்கு ரூ80 அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.57,800க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web