இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்!

 
இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்!

நாளை , ஆவணி 30 , செப்டம்பர் 15, புதன்கிழமை


திதி: நவமி பகல் 11.18 வரை ,பின்பு தசமி.
நட்சத்திரம்:பூராடம்
யோகம்: அமிர்தயோகம்.
கஜலட்சுமி விரதம்.
புதிய முயற்சி, பயணங்களை தவிர்க்க வேண்டிய நாள்.


இராகு காலம்: மதியம் 12.00-1.30
எம கண்டம்: காலை 07.30-09.00
குளிகன் :பகல் 10.30 – 12.00

இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்!


சுப ஹோரைகள் :காலை :06.00-07.00
காலை :09.00-10.00
மதியம் :1.30-2.00
மாலை: 04.00-05.00
இரவு :07.00-09.00
இரவு: 11.00-12.00

நாளைய ராசிபலன்

மேஷம்

இன்று எதிர்பார்த்த பணவரவு உண்டு . அதே அளவுக்கு செலவுகளும் வந்து சேரும். சிறு ,சிறு குழப்பங்கள் வந்து மறையும். தொழிலில் வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. உறவினர்களால் அனுகூலம் கிட்டும். உடல் நலனில் ஆரோக்கியம் மேம்படும்.

ரிஷபம்

இன்று தேவையற்ற மனக்குழப்பங்கள் உருவாகலாம். அலைச்சல் அதிகரிக்கும் அதே நேரத்தில் ஆதாயம் உண்டு . வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் வாக்குறுதிகளை தவிர்க்க வேண்டிய நாள்.

இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்!

மிதுனம்

இன்று எந்த காரியத்தையும் பொறுப்பாக செய்து முடிக்கும் நாளாக அமையும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. தொழிலி எதிர்பார்த்த பணவரவு உண்டு.

கடகம்

இன்று உற்சாகமான நாள். சுபசெய்திகள் வந்து சேரும்.குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் முன்னேற்றங்கள் உண்டாகும்.உறவினர்களால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் பாராட்டுக்கள் பெறும் நாள்.

சிம்மம்

இன்று உடல் நலனில் அக்கறை அவசியம். சிறு மனக்கசப்பு உருவாகலாம். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. சேமிப்புக்களில் இருந்து செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகலாம். நண்பர்களால் ஆதாயம் உண்டு.

இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்!


கன்னி

இன்று மனக்குழப்பங்கள் உருவாகலாம். கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்பட வேண்டியது அவசியம். தொழிலில் புதிய முயற்சிகளுக்கு பலன் உண்டு. நண்பர்களால் ஆதாயம் உண்டு. லாபகரமான நாள்.

துலாம்

இன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் அதிகரிக்கும் நாள். புதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் உண்டு. பொன், பொருள் சேர்க்கை உண்டு. உடல் நிலை மேம்படும். அலுவலகத்தில் பாராட்டுக்கள் குவியும். குதூகலமான நாள்.

விருச்சிகம்

இன்று யோகமான நாள். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சுப நிகழ்வுகள் உண்டு. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். புதிய முயற்சிகளால் நல்ல பலன் உண்டு. பொன், பொருட் சேர்க்கை உண்டு.

இந்த ராசிக்காரர்களுக்கு யோகமான நாள்!

தனுசு

இன்று இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு.வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டு. யோகமான நாள்.

மகரம்

இன்று வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவுகள் வந்து சேரும். தொழிலில் சில முயற்சிகளுக்கு பிறகே பணவரவு வந்து சேரும். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. தெய்வ வழிபாட்டின் மூலம் ஆதாயம் பெறலாம்.

கும்பம்

இன்று குதூகலம் அதிகரிக்கும் நாள். இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். குடும்பத்திற்கு தேவையானதை செய்து முடிப்பீர்கள். பொன், பொருள், ஆடம்பர சேர்க்கை உண்டு. நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

மீனம்

இன்று மகிழ்ச்சியான நாள். சுபசெலவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில் கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் பாராட்டுக்களை பெறலாம். உறவினர்கள், நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். சேமிப்புக்கள் உயரும் நாள்.

From around the web