குட் நியூஸ்... தொடர் விடுமுறை... கூட்ட நெரிசல்... நாளை முதல் நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைப்பு!
Jan 10, 2025, 07:07 IST
தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தொடர் விடுமுறை தினங்களாக அமைந்திருப்பதால் பலரும், உறவினர்களுடன் சேர்ந்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாட முடிவு செய்து, சொந்த ஊர் நோக்கி பயணப்பட திட்டமிட்டு வருகின்றனர். தென்மாவட்டங்களுக்கான ரயில்களில் முன்பதிவு முடிவடைந்த நிலையில், சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக 8 பெட்டிகளுடன் இயங்கும் வந்தே பாரத் ரயிலில் நாளை ஜனவரி 11ம் தேதி முதல் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி சென்னை - நெல்லை 'வந்தே பாரத்' ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு, 16 பெட்டிகள் கொண்ட ரயிலாக நாளை ஜனவரி 11ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், திருவனந்தபுரம்-காசர்கோடு 'வந்தே பாரத்' ரயிலில் கூடுதாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு 20 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
From
around the
web