இளம்பெண்களே உஷார்... உடை மாற்றும் அறையில் கேமரா வைத்த 2 பேர் மீது குண்டாஸ் !

 
குண்டாஸ்
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப்பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்திற்கு தினமும்  பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது.இந்நிலையில்  பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிவிட்டு மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுத்து வந்தால் மோட்சம் கிட்டும் என்ற ஐதீகம் உள்ளது. இதனையடுத்து தினமும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து திதி கொடுப்பதற்காக அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி விட்டு பெண்கள் கடற்கரைக்கு முன்பாக உள்ள தனியார் உடைமாற்றும் அறைகளில்  உடைகளை மாற்றி சென்று வருகின்றனர்.

குண்டாஸ்


இந்நிலையில்   டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், கடலில் குளித்துவிட்டு உடை மாற்றுவதற்காக சென்றார். அப்போது உடை மாற்றும் தனியார் அறையில் இருப்பவர்கள் வயதானவர்களை ஒரு பக்கமாகவும் வயது குறைந்தவர்களை ஒரு பக்கமாகும் பிரித்து அனுப்பினர்.  அதில் சந்தேகம் அடைந்த புதுக்கோட்டை மாவட்டச் சேர்ந்த இளம்பெண் உடைமாற்றும் அறையை நடத்தி வருபவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அறைக்குள் சென்று பார்த்தபோது, சிறிய ரக கேமிராக்களை டைல்ஸ் கல்லுடன் சேர்த்து வைத்து ஒட்டி இருந்தனர். அதில் உடைமாற்றி வந்த இளம் பெண்களின் அந்தரங்கத்தை வீடியோ எடுத்து அதனை பார்த்து ரசித்து வந்துள்ளனர். இதனை தனது  சக நண்பர்களுக்கும் அந்த வீடியோவை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. 

குண்டாஸ்


இதேபோன்று கடந்த சில மாதங்களாகவே நடந்து வந்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரம் கோவில் காவல் நிலையத்தில்  இளம் பெண்ணுடைய தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார்  நடவடிக்கை எடுத்து இதுவரை 2 பேரை கைது செய்துள்ளனர்.  இந்நிலையில் உடை மாற்றும் அறையை நிர்வகித்த ராஜேஷ் கண்ணன், கடை ஊழியர் மீரா மைதீன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

From around the web