அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து... 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

 
பேருந்து

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர், நடத்துனர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் போக்குவரத்து கழக பணிமனையைச் சேர்ந்த அரசு பேருந்து இன்று  கோவில்பட்டியில் இருந்து விளாத்திகுளம் நோக்கி வந்து கொண்டிருந்தது இப்பேருந்தை செல்வக்குமார் என்ற ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார். இப்பேருந்து போது கழுகாசலபுரம் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பு கம்பியின் மீது மோதி அருகேயுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து உள்ளானது. 

விபத்து

இந்த விபத்தில் இப்பேருந்தின் ஓட்டுநர் செல்வக்குமார் மற்றும் நடத்துநர் கார்த்திக்கேயன் உட்பட விளாத்திகுளத்திற்கு வந்து கொண்டிருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேருந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ்காக காத்திருக்காமால் துரிதமாக செயல்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தூத்துக்குடி

மேலும் ஓட்டுநர் காயமடைந்து இருப்பதால் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை காரணமாக பேருந்து விபத்திற்கான முழுமையான காரணம் தற்போது வரை தெரியவில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web