அரசு மருத்துவமனை அலட்சியம்.. ஒரே ஊசியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் செவிலியர்கள்.. பகீர் வீடியோ வைரல்!

 
மயிலாடுதுறை அரசு மருத்துவமனை

மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்கு ஊசி போடுவதற்காக ஒரே சிரிஞ்ச் பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தரங்கம்பாடி தாலுக்கா அகுரே கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஹரன். இவரது தாய் கல்யாணிக்கு நெஞ்சுவலி காரணமாக கடந்த 27ம் தேதி மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அங்கு பணிபுரியும் செவிலியர்கள், அதே சிரிஞ்ச் மூலம் நோயாளிகளுக்கு ஊசி போடுவதாக கூறி, செல்போனில் வீடியோ எடுத்து, செவிலியரிடம் விசாரித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வீடியோவில், அவரது குற்றச்சாட்டை செவிலியர் மறுத்துள்ளார். மேலும் ஹரிஹரன் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டதால், மருத்துவமனையில் நான் இல்லாத நேரத்துல் நடக்க முடியாமல் தவித்த எனது தாயை நர்ஸ்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து கடுமையாக பேசியதாகவும் ஹரிஹரன் கூறியுள்ளார்.

அவர் அளித்துள்ள மனுவில், ஒரே சிரிஞ்சை பலருக்கு உபயோகிப்பதால் எந்த வகையான குணப்படுத்த முடியாத வைரஸ் கிருமிகள் பரவும் என்பது தனக்குத் தெரியும் என்பதால், 3 மாதங்களுக்குப் பிறகு தனது தாய்க்கு பரிசோதனை செய்து நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கு அரசு மருத்துவமனை நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பானுமதியிடம் ஹரிஹரன் கொடுத்த மனுவை மாவட்ட ஆட்சியர் அளித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!

From around the web