இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை!

 
இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை!


தமிழகத்தில் வன்னியருக்கு 10.5 % இடஒதுக்கீட்டை முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்து அரசாணை வெளியிட்டுள்ளார். இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாட்டில் சமூக நீதியை காக்கும் இயக்கம் திமுக என்பதை முதல்வர் ஸ்டாலின் மறுபடியும் நிரூபித்து உள்ளார்.

கலைஞர் தமது ஆட்சியில் 108 சாதிகளை ஒருங்கிணைத்து இட ஒதுக்கீட்டை உறுதி செய்து மக்களின் வாழ்வுரிமைக்கு குரல் கொடுத்தார். தற்போது அவரின் கொள்கையை பின்பற்றி முதல்வர் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளார். அவர்களுக்கு அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை!

அதிமுக ஆட்சியில் வன்னியர் மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய போடப்பட்ட ஒப்பந்தத்தை முதல்வர் நடைமுறைப்படுத்தி இருக்கிறார்.தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதே போல இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேரின் வாரிசுகளுக்கு அரசு வேலையும், வீடும் தரப்பட வேண்டும் எனவும் முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் முதல்வர் அதையும் செய்து முடிப்பார் என நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்-

From around the web