விபத்தில் உயிரிழந்த காவல்துறை ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ25 லட்சம் நிவாரணம்!
திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் நிலைய உதவி ஆய்வளராக பணிபுரிந்தவர் சுப்பையா. இவருக்கு வயது 57. இவர் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூ.25 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த சுப்பையா (57) அக்டோபர் 21 ம் தேதி பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென தவறி விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அக்டோபர் 25ம் தேதி சுப்பையா சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
காவல் உதவி ஆய்வாளர் சுப்பையா மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
காவல் உதவி ஆய்வாளர் சுப்பையாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அத்துடன் அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!