அரசு மருத்துவமனையில் குரங்கு அம்மை நோய்க்கான சிறப்பு வார்டு!
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 5 படுக்கைகள் கொண்ட குரங்கு அம்மை நோய்க்கான சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் துறைமுகம் மற்றும் விமான நிலையம் உள்ளதால் அனேக கப்பல்களும் அதில் பணி செய்யும் ஊழியர்களும் வேற்று நாட்டில் இருந்து வரும் வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் மூலமாக குரங்கு அம்மை பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதால் தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முன்னேற்பாடாக குரங்கு அம்மை நோய்க்கான சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 5 படுக்கை வசதிகள் உள்ளன. சிகிச்சைக்கான அனைத்து மருத்துவ வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. முக கவசம் மற்றும் Apron போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குரங்கு அம்மை அறிகுறிகளுடன் நோயாளிகள் வரும் பட்சத்தில் அவரிடமிருந்து பெறப்பட்ட ரத்த மாதிரிகள் மற்றும் ஸ்வாப் (Swab) மாதிரிகள் எடுத்து கிண்டி மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பப்படும்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு மற்றும் மருத்துவ கல்லூரி இயக்ககம் மற்றும் முதல்வர் சிவக்குமார் அறிவுறுத்தலின் படி உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, நுண் உயிரியல் தலைவர் ஜெயமுருகன், மருத்துவத்துறை பேராசிரியர் ராஜவேல் மற்றும் முருகன் ஆகியோர் செய்துள்ளனர்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா