பெரும் பரபரப்பு.. பாலியல் வழக்கில் காங்கிரஸ் எம்.பியை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்!

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரில் உள்ள தனது வீட்டில் காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ரத்தோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது, போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுப்பொருளாகியது. இதன் பின்னணி என்ன என்பதை பார்ப்போம்..
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி நான்கு ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக ரத்தோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜனவரி 17 ஆம் தேதி, அந்தப் பெண் புகார் அளித்ததை அடுத்து, உத்தரபிரதேச போலீசார் ரத்தோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மூன்று நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் எம்.பி.யின் வழக்கறிஞர்களான அரவிந்த் மஸ்தலன் மற்றும் தினேஷ் திரிபாதி ஆகியோர் சீதாபூரில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
ஜனவரி 23 ஆம் தேதி, சீதாபூரில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ நீதிமன்றம் ரத்தோரின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்தது. இந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் அவரது முன்ஜாமீன் மனுவை நிராகரித்த ஒரு நாளுக்குப் பிறகு ரத்தோர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!