பெரும் பரபரப்பு.. மோதலில் ஈடுபட்ட திமுக கவுன்சிலர்கள்.. உடனே நெஞ்சு வலி என சுருண்டு விழுந்த மேயர்!

 
கும்பகோணம் மேயர்

கும்பகோணம் மாநகராட்சி மேயராக சரவணன் பதவி வகித்து வருகிறார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஒரே மேயராக உள்ள இவருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாநகராட்சி கவுன்சில் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 54 தீர்மானங்களின் கோப்புகளை திமுக கவுன்சிலர் தட்சிணாமூர்த்தி கேட்டபோது, ​​கூட்டம் முடிந்துவிட்டதாகக் கூறிவிட்டு மேயர் அறைக்குச் செல்ல முயன்றார். இதையறிந்த தட்சிணாமூர்த்தி வேகமாக ஓடி வந்து மேயர் அறை முன் தர்ணா போராட்டத்தை தொடங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த மேயர் சரவணன், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்.

அப்போது மாநகராட்சி மேயர் சரவணன் திடீரென பேரவை அலுவலகத்தின் தரையில் படுத்து நெஞ்சுவலி என்று கதறினார். பீதியடைந்த கவுன்சிலர்கள் அவருக்கு ஆறுதல் கூறி மேயர் அறைக்கு அழைத்துச் சென்றனர். மேயர் கோப்புகளை கேட்டபோது மாரடைப்பு வருவது போல் நடித்ததாக தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் விமர்சித்தனர். மேயர் தரையில் படுத்து அய்யோ நெஞ்சு வலிக்குதே என அலறி துடித்த சம்பவம் கும்பகோணம் மாநகராட்சியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web