பெரும் பயங்கரம்.. புளிய மரத்தில் கார் மோதி விபத்து.. இரு ஐயப்ப பக்தர்கள் துடி துடித்து பலி!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை-சத்தி சாலையில் இன்று (ஜனவரி 10) காலை ஒரு கார் வந்து கொண்டிருந்தது. சிறுமுகை அருகே பால்கரன் சாலை அருகே கார் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் கார் சாலையோரத்தில் இருந்த ஒரு புளிய மரத்தில் மோதியது. விபத்தில் காரின் முன்பகுதி நசுங்கியது. விபத்து குறித்து அறிந்த வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
தகவல் அறிந்த சிறுமுகை போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். காரில் இருந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கர்நாடகாவின் கொல்லேக்கல் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (58) மற்றும் வெங்கடாத்திரி (62) ஆகியோர் இறந்தனர் என்பதும், அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார் (44), துரைசாமி (61) மற்றும் சாமி (41) ஆகியோர் காயமடைந்தனர் என்பதும் தெரியவந்தது.
கர்நாடகாவின் மேற்கண்ட பகுதியைச் சேர்ந்த இவர்கள், சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் இருந்து காரில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றிருந்தனர். அங்கு சுவாமியை தரிசனம் செய்த பிறகு, கேரளாவிலிருந்து கோவை வழியாக கர்நாடகா செல்ல முடிவு செய்து, அந்த வழியாகத் திரும்பினர். அதன்படி, அவர்களின் கார் இன்று கோவையை அடைந்தபோது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!