பெரும் சோகம்.. பிரசவத்தின் போது பெண் மருத்துவர் உயிரிழப்பு.. கதறும் உறவினர்கள்!

 
பாத்திமா

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் அரூர் அருகே உள்ள சந்தூர் பகுதியை சேர்ந்தவர் கபீர். இவரது மனைவி ஷீஜா. இவர்களது மகள் பாத்திமா. டாக்டரான இவர் திருச்சூரில் உள்ள கல்லூரியில் 3ம் ஆண்டு எம்டி படித்து வருகிறார். இவரது கணவர் கொல்லம் மாவட்டம் ஓச்சாரா பகுதியை சேர்ந்தவர் சனுஜ். இந்நிலையில், இரண்டாவது பிரசவத்திற்காக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாத்திமா அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

பரபரப்பு! விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ்! நிறைமாத கர்ப்பிணி உட்பட 3 பேர் பலி!

பிரசவத்தின் போது திடீரென அவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது.  அப்போது அவருக்கு அதிகப்படியான ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாத்திமாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். எனினும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து எர்ணாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரசவத்தின் போது பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web