பெரும் சோகம்... லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் கருகி பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

 
காட்டுத்தீ

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ தீவிரமாக பற்றி எரிந்து வருகிறது.  பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

காட்டுத்தீ

தற்போது காற்றின் வேகம் சற்றே குறைந்துள்ளதால் விரைவில் தீயை அணைக்கலாம்  என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  இதனிடையே, காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. வீடுகள் உட்பட பல  கட்டிடங்கள் தீக்கிரையாகி வருகின்றன. காட்டுத்தீ காரணமாக சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி   அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீயால் சுமார் 10000 ஹெக்டேர் நிலப்பரப்பு முற்றிலும் நாசமாகியுள்ளது.   லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்கா காட்டுத்தீ

மேலும் இந்த காட்டுத்தீயால் குறைந்தது 10,000க்கும் அதிகமான வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web