பெரும் சோகம்.. மின்சாரம் தாக்கி 2 பம்ப் ஆபரேட்டர்கள் பரிதாபமாக பலி!
அணைக்கட்டு அருகே தெருவிளக்கு கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 பம்ப் ஆபரேட்டர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் பரிதாபம் - 2 உயிர் போயிருக்கு இன்னும் ஆம்புலன்ஸ்ஸ காணோம்..! மின் விளக்குக் கம்பத்தை நட முயன்ற இருவர் மின்சாரம் தாக்கி பலி #VELLORE pic.twitter.com/OMfekYDSd3
— Mahalingam Ponnusamy (@mahajournalist) November 28, 2024
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சி ரங்கப்பன் கொட்டாய் பகுதியில் ஊராட்சி சார்பில் மின் விளக்குகள் அமைக்கும் பணிக்காக இரும்பு கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. வேப்பங்குப்பம் பம்ப் ஆப்பரேட்டர் முத்துக்குமரன், 45, உள்ளூர் தொழிலாளி அசோக்குமார், 55, ஆகியோர், நேற்று மதியம், 2:00 மணிக்கு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இரும்பு கம்பம் அமைக்கும் போது, மின்கம்பம் அறுந்து அருகில் இருந்த மின்கம்பியில் மோதியது. இதில் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்து பல மணி நேரம் ஆகியும் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வராததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!