பெரும் சோகம்... கார் மரத்தில் மோதி 2 இளைஞர்கள் பலி!
செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அடுத்த லத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் மகேஸ்வரன் மகன் சந்தோஷ். இவரது நண்பர் மதுராந்தகம் பகுதியில் வசித்து வருபவர் 29 வயது கார்த்திக். இருவரும் நேற்று இரவு 7 மணிக்கு மாருதி ஷிப்ட் காரில் பவுஞ்சூரில் இருந்து மதுராந்தகம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்த காரை சந்தோஷ் ஓட்டி வந்துள்ளார்.
முதுகரை அடுத்துள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள இலுப்பை மரத்தின் மீது சென்று பலமாக மோதியது. இதில் கார் முற்றிலும் உருக்குலைய கார் ஓட்டி வந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விபத்தை கண்டு அங்கு கூடிய போது மக்கள் பலத்த காயமடைந்த கார்த்திக்கை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கார்த்திக்கும் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் உயிரிழந்த இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சித்தாமூர் போலீசார் இருவரும் மதுபோதையில் விபத்து ஏற்படுத்தினரா அல்லது கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதா எனவும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!