பெரும் அதிர்ச்சி.. திறக்க முடியாமல் போன ஆம்புலன்ஸ் கதவுகள்.. உள்ளே சிக்கிய பெண் உயிரிழந்த சோகம்!

 
ஆம்புலன்ஸ்

ராஜஸ்தானின் பில்வாரா நகரத்தைச் சேர்ந்த 45 வயதான சுலேகா. கடந்த ஞாயிற்றுக்கிழமை  தற்கொலைக்கு முயன்றார். இதை அறிந்த அவரது உறவினர்கள், அவரை ஆம்புலன்சில் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையை அடைந்ததும், ஊழியர்கள் ஆம்புலன்ஸின் பின்புறக் கதவைத் திறந்து சுலேகாவை மருத்துவமனைக்குள் அழைத்துச் செல்ல விரைந்தனர்.

ஆம்புலன்ஸ்

ஆனால் கதவைத் திறக்க முடியவில்லை. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் கதவைத் திறக்க அவர்கள் போராடினர். இருப்பினும், அவர்களால் முடியவில்லை. எனவே, வேறு வழியில்லாமல், அவர்கள் ஆம்புலன்ஸின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து சுலேகாவை வெளியே எடுத்தனர். பின்னர், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

ஒருபுறம், ஆம்புலன்ஸின் கதவுகள் திறக்காததால் சுலேகா இறந்துவிட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஆனால் மறுபுறம், "சுலேகா ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டபோது உயிருடன் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. எனவே, அவர் முன்பே இறந்துவிட்டார் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்தனர்.

பள்ளி மானவி தற்கொலை

இந்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் நமித் மேத்தாவின் கவனத்திற்கு வந்துள்ளது, மேலும் இந்த விஷயத்தை விசாரிக்க நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் கதவைத் திறக்க முடியாமல் பெண் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web