பெரும் அதிர்ச்சி.. ரயில் தண்டவாளத்தில் இரு துண்டுகளாக கிடந்த 17வயது சிறுவனின் உடல்!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொடையாஞ்சி பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் நரசிம்மன் (17). சிறுவன் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு அதே பகுதியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இன்று (ஜனவரி 5) நெக்குந்தி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சிறுவன் நரசிம்மன் இரண்டு துண்டுகளாக பிணமாக கிடந்தார்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவனின் உடலை ரயில் தண்டவாளத்தில் இருந்து அகற்றி பார்த்தபோது, உடலில் ரத்தக்காயங்கள் இருந்ததை கண்டனர். சிறுவனின் உடலை ஆம்புலன்சில் ஏற்ற முயன்றபோது, சிறுவனின் மரணத்தில் சந்தேகம் அடைந்த சிறுவனின் உறவினர்கள், உடனடியாக உரிய விசாரணை நடத்தக் கோரி, சடலத்தை ஆம்புலன்சில் ஏற்றிச் செல்ல விடாமல் தடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சிறுவனின் உடலை பரிசோதனை செய்து, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரயில் தண்டவாளத்தில் 17 வயது சிறுவன் இரண்டு துண்டுகளாக பிணமாக கிடந்த சம்பவம் நெக்குந்தி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!