பெரும் அதிர்ச்சி.. 9 வயது சிறுமிக்கும் 15 வயது சிறுவனுக்கும் இடையே நடந்த குழந்தை திருமணம்!

 
குழந்தை திருமணம்

சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் ஹரிதாவை செல்போனில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்டு, ஜூலை 10ஆம் தேதி மயிலாப்பூர் பகுதியில் 9 வயது சிறுமிக்கும், 15 வயது சிறுவனுக்கும் குழந்தை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் கிடைத்தது.

திருமணம் கல்யாணம் கும்பம்

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் குழந்தை திருமணம் நடந்தது தெரியவந்தது. பின்னர், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஹரிதா புகார் அளித்ததையடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி, சிறுமியையும், சிறுவனையும் மீட்டு கெல்லீஸில் உள்ள சிறார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், இரு குழந்தைகளின் பெற்றோர் மீதும் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இரு குழந்தைகளின் பெற்றோரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web