பெரும் அதிர்ச்சி.. அரசு பேருந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. அலறியடித்து ஓடிய பயணிகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சேலம் செல்லும் சாலையில் உள்ள ஒண்ணகரை காப்புக்காடு என்ற பகுதியில் திருப்பூர் பகுதியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பேருந்து என்ஜினில் திடீர் தீப்பிடித்ததால் பதறிய ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் பேருந்தை நிறுத்தி பார்க்கும்பொழுது தீ பரவத் தொடங்கியது. இதையடுத்து பயணிகள் முழுவதுமாக கீழே இறக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பேருந்தை ஓட்டுநர் கார்த்திக் மற்றும் பாண்டியராஜன் என்பவர்கள் பேருந்தை இயக்கி வந்ததாகவும், திருவண்ணாமலை கோவிலுக்கு அன்னதானம் பொருட்கள் மற்றும் 35 பயணிகளுடன் பேருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஊத்தங்கரை அரசு போக்குவரத்து பணிமனைக்கு பேருந்து எடுத்து செல்லப்பட்டது.
இச்சம்பவம் சம்பந்தமாக ஊத்தங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பேருந்தில் இருந்த பயணிகள் யாருக்கும் எவ்வித காயமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா