பெரும் அதிர்ச்சி.. பாகிஸ்தான் நிலச்சரிவு.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பலி!
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் அப்பர் டிர் மாவட்டத்தில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு வீட்டின் மேல் இடிந்து விழுந்தது. இதில் 3 பெண்கள், 6 குழந்தைகள், 3 ஆண்கள் என மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்த 12 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து அப்பகுதியை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாகிஸ்தானின் சில பகுதிகள் தற்போது கனமழை காரணமாக பல மாவட்டங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவை எதிர்கொண்டுள்ளன. அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்யும் என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!