பெரும் அதிர்ச்சி.. கேஸ் சிலிண்டர் திறந்து விட்டு குடும்பத்தினரை மிரட்டிய இளைஞர்!

 
பத்தனம்திட்டா இளைஞர்

கேரளாவில் இளைஞர் ஒருவர் தனது பெற்றோர் மற்றும் சகோதரியை வீட்டிற்குள் பூட்டிவிட்டு சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து தீ வைத்து விடுவதாக மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் பத்தனம்திட்டா அருகே உள்ள அடூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கோபத்தில் இளைஞர் ஒருவர் டிசம்பர் 31 (செவ்வாய்க்கிழமை) இரவு தனது பெற்றோர் மற்றும் சகோதரியை வீட்டிற்குள் பூட்டிவிட்டார். பின்னர், அவுட்ஹவுஸில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டரை எடுத்து வந்த அவர், அதன் பைப்பை வீட்டுக்குள் வைத்து, காஸ் திறந்து விட்டார். வீடு முழுவதும் வாயு பரவியதால், வீட்டை தீ வைத்து கொளுத்தி விடுவதாக குடும்பத்தினரை மிரட்டினார்.

போலீஸ்

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்த இளைஞரை கைது செய்ய முயன்றனர். ஆனால் இளைஞர்கள் போலீசாரை கற்களால் தாக்கினர். இருப்பினும் போலீசார் அந்த இளைஞரை மடக்கி பிடித்து அவரது குடும்பத்தினரை மீட்டனர். குடும்பத்தினரிடம் விசாரித்ததில், அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், தங்களுக்கு தெரியாமல் இப்படி தவறிழைத்து விட்டதாகவும், எனவே அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web