பெரும் ஷாக்.. மீண்டும் உயரும் அத்தியாவசிய பொருட்களின் விலை.. தயாரிப்பு நிறுவனங்கள் அதிரடி முடிவு!

உலகம் முழுவதும் சமையல் எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. சோப்பு, ஷாம்பு, நூடுல்ஸ், பிஸ்கட் மற்றும் சாக்லேட் தயாரிக்க பாமாயில் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. தற்போது பாமாயில் விலை உயர்வு காரணமாக, இந்த பொருட்களின் விலை அதிகரிக்க காரணமாகி வருகிறது.
அந்த வகையில், சோப்பு, ஷாம்பு, ஹாண்ட் வாஷ் போன்றவற்றின் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாமாயில் விலை அதிகரித்துள்ளது. மேலும், சில மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, சோப்பு, ஷாம்பு போன்றவற்றின் விலையும் விரைவில் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. HUL மற்றும் கோத்ரெஜ் போன்ற நிறுவனங்கள் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. அவற்றின் விலைகள் ஏற்கனவே டிசம்பரில் உயர்த்தப்பட்டன. இப்போது விலை மீண்டும் அதிகரிக்கப் போவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!