பெரும் அதிர்ச்சி.. 21 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை.. ஹாஸ்டல் வார்டனுக்கு தூக்கு தண்டனை!

 
யும்கென் பக்ரா

கடந்த நவம்பர் 2022 இல், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் தனது 12 வயது இரட்டை மகள்கள், அங்கு வார்டனாக இருந்த யும்கென் பக்ராவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவர்களது தந்தை தெரிவித்திருந்தார். சம்பவம் நடந்த இடம் அரசால் நடத்தப்படும் பள்ளியின் விடுதி என்பதால் இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு வழக்கை விசாரித்தது. இது தொடர்பான குற்றப்பத்திரிகை கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி, 2014-2022ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வார்டன் யும்கென் பக்ரா 6 முதல் 14 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்கள் மற்றும் 15 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், விசாரணையில், குழந்தைகளை பலாத்காரம் செய்வதற்கு முன், வார்டன், குழந்தைகளுக்கு போதை மருந்து கொடுத்து, விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாது என மிரட்டியதும் தெரியவந்தது. இந்தக் கொடுமையும் முடிவுக்கு வரவில்லை. வார்டனின் பாதிக்கப்பட்டவர்களில் ஆறு பேர் தற்கொலைக்கு முயன்றனர். தற்கொலைக்கு முயன்றவர்களைத் தவிர, பாதிக்கப்பட்ட மற்ற மாணவர்கள் இது குறித்து பள்ளியின் ஹிந்தி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், வார்டன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில் , ''இதை வெளியே சொன்னால், பள்ளியின் பெயர் கெட்டுவிடும். அதனால் அமைதியாக இரு” என்று மாணவர்களை மிரட்டியுள்ளனர். இந்த அதிர்ச்சி தகவல் வெளியானதையடுத்து, வதேர்ன் யும்கென் பக்ரா மீது ஐபிசி பிரிவு 328, 292, 506 மற்றும் போக்சோ சட்டத்தின் 6, 10, 12 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம், முன்னாள் ராணுவ வீரர் யும்கென் பக்ராவுக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

‘லிவிங் டுகெதர்’ ஜோடிகளுக்கு இந்த உரிமை கிடையாது!! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!!

குற்றத்தை வெளிப்படுத்தத் தவறியதற்காக முன்னாள் தலைமை ஆசிரியர் சிங்துங் யோர்பென் மற்றும் இந்தி ஆசிரியர் நகோம்திர் ஆகியோருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web