பெரும் ஷாக்.. உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்த இளைஞர்!

 
குஜராத் இளைஞர்

உடல் உழைப்பின்மை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, அதிக மன உளைச்சல், ஒழுங்கற்ற உணவுப் பழக்கம், போதைப்பொருள் பயன்பாடு ஆகியவை இளம் தலைமுறையினரின் அதிக மாரடைப்புக்கு முக்கியக் காரணங்களாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சில சமயங்களில் குடும்ப வரலாறும் ஒரு காரணமாகும். இப்போதும் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.  இந்நிலையில், குஜராத்தில் தனது நண்பர்களுடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த ஹேமந்த் பாய் ஜோகல் என்ற இளைஞர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள பருடியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமந்த் பாய் ஜோகல். ஜாம்நகரில் உள்ள அஹிர் சமாஜ் விடுதியில் காவலர் ஆள்சேர்ப்பு தேர்வுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு படித்து வருகிறார். இதற்காக சக மாணவர்களுடன் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி ஹேமந்த் தனது நண்பர்களுடன் ஜாகிங் செய்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அப்போது, ​​அங்கிருந்த சக போட்டியாளர்கள் அவரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் எழுந்திருக்காததால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

மாரடைப்பு

இந்நிலையில் இளைஞர் மயங்கி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் தலைமுறையினர் இப்படி மாரடைப்பால் இறப்பது இது முதல் முறையல்ல. இந்த மாத தொடக்கத்தில் கூட ஒன்பது வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இளைஞர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web