பெரும் அதிர்ச்சி.. வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்த இளைஞர்.. போலீசார் தீவிர விசாரணை!

 
சூர்யா

தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் புத்தூர் கிராமம் அருகே 20 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதை பார்த்த அங்கிருந்த குடோன் காவலாளி தேவராஜன், சேலையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், இறந்தவரின் கழுத்து அறுக்கப்பட்டு, உடலில் பிளாஸ்டிக் கவர் போட்டு, ஆரஞ்சு நிற துணியால் கை, கால்கள் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. அந்த நபரின் கைகளிலும் முகத்திலும் வெட்டுக்காயம் இருந்தது.

கொலை

இதையடுத்து சேலையூர் போலீசார், சென்னை பரங்கிமலையில் உள்ள மோப்ப நாய் படைக்கு தகவல் அளித்து, சம்பவ இடத்துக்கு டைசன் என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, ​​மோப்ப நாய் இறந்தவரின் உடலை மோப்பம் பிடித்து மேற்கு நோக்கி 300 மீட்டர் தூரம் ஓடி பின் திரும்பியது. இதையடுத்து தடய அறிவியல் துறை கூடுதல் இயக்குனர் பவானி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இதையடுத்து, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, ​​உயிரிழந்தவர் சேலையூர் இந்திரா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் சூர்யா (21) என்பது தெரியவந்தது. எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார். மேலும் சூர்யா பிறவியிலேயே காது கேளாதவர் மற்றும் வாய் பேச முடியாதவர் என்பதும் தெரியவந்தது.

இவர் கடந்த 13 ஆண்டுகளாக சேலையூர் இந்திரா நகர் பகுதியில் வசித்து வந்ததும், இதற்கு முன்பு சென்னை எண்ணூர் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சூர்யா வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web