பெரும் ஷாக்.. ரயிலில் 2 வயது குழந்தையை தனியே தவிக்க விட்ட கொடூரம்!

 
குழந்தை

சென்னையில் இருந்து கோவைக்கு இரவு வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக தவித்த 2 வயது குழந்தையை ரயில்வே ஊழியர்கள் மீட்டனர்.  இச்சம்பவம் குறித்து கூறுகையில், ​​பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு, ரயிலை சுத்தம் செய்யும் ஊழியர்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் குழந்தை தூங்குவதைக் கண்டனர்.

ரயில்

உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதிகாரிகள் கஜேந்திரன் மற்றும் ரம்யா ஆகியோர் குழந்தையை மீட்டு பாதுகாப்பாக கொண்டு வந்தனர். குழந்தையை ரயிலில் கொண்டு சென்றது யார், எதற்காக குழந்தையை விட்டுச் சென்றார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

குழந்தை

இந்நிலையில், குழந்தை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தையை விட்டுச் சென்றாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web