அதிர்ச்சி... எளிதான தற்கொலைக்கு கேப்சூல்... பரிதாபமாக உயிரை விட்ட பெண்!

 
 தற்கொலை கேப்சூல்

தற்கொலைச் செய்து கொள்வதற்கு கேப்சூல் இருப்பது அதிர்ச்சியளிக்கும் நிலையில், 64 வயதான அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தற்கொலைக் காப்ஸ்யூலைப் பயன்படுத்தி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எளிதான தற்கொலைக்காக 'சர்கோ' என்ற தற்கொலைக் காப்ஸ்யூல் கண்டுபிடிக்கப்பட்டது. இது மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், 64 வயதான அமெரிக்க பெண் ஒருவர் இந்த கேப்சூலை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டார்.

சுவிட்சர்லாந்தின் வடக்குப் பகுதியில், சுவிஸ்-ஜெர்மன் எல்லைக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த தற்கொலை கேப்சூலை பயன்படுத்தி ஒருவர் தற்கொலை செய்து கொள்வது இதுவே முதல் முறை. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த காப்ஸ்யூலில் நுழைந்து உள்ளே உள்ள பட்டனை அழுத்தினால் சில நிமிடங்களில் இறந்துவிடுவார்கள். ஏனெனில் கேப்சூலின் உள்ளே நைட்ரஜன் வாயு வெளியாகிறது. நைட்ரஜன் வாயு விஷம் இல்லை என்றாலும், அது ஆக்ஸிஜனைக் குறைக்கிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உள்ளே இருப்பவர் சில நிமிடங்களில் இறந்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web