பெரும் அதிர்ச்சி.. கூலித் தொழிலாளி கொடூரமாக வெட்டி படுகொலை.. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள சூசை நகரை சேர்ந்தவர் தேம்பாவாணி (50). மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தேம்பாவணியின் மனைவி தனது இரண்டு மகன்களுடன் ராஜபாளையத்துக்கு குடிபெயர்ந்துள்ளார். தேம்பாவனியும் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை முத்தையாபுரம் துறைமுகம் ரோடு சண்முகபுரம் அருகே தேம்பாவணி முகம் மற்றும் தலை வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் மதன், முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீஸார், தேம்பாவனியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடிபோதையில் இருந்தவர்களிடையே ஏற்பட்ட தகராறில் தேம்பாவணி கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!