பெரும் அதிர்ச்சி.. வீட்டில் தூங்கி கொண்டிருந்த வாலிபர் வெட்டிக் கொலை.. மர்ம கும்பல் வெறிச்செயல்!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த சிறுநத்தூரில் உள்ள மதுரா சாலையூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன். ஏரிக்கரைக்கு அருகிலுள்ள தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி அங்கு வசித்து வருகிறார். அவரது மகன் கார்த்திகேயன் (33). சிறுநத்தூர் பேருந்து நிலையம் அருகே இ-சேவை மையம் நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கார்த்திகேயன் நேற்று இரவு இ-சேவை மையத்தைப் பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்தார்.
வழக்கம் போல், இரவில் முன்பக்க கதவுக்கு பின்னால் படுத்து தூங்கினார். அவரது பெற்றோர் தனித்தனி இடங்களில் தூங்கினர். கார்த்திகேயனின் தாத்தா கோபால் (90), கார்த்திகேயனுக்கு அருகில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை 1.30 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம கும்பல், கார்த்திகேயனை கத்தியால் வெட்டிக் கொன்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க கார்த்திகேயன் முயன்றார், ஆனால் முடியவில்லை. அதற்குள், கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார், அவரது மூளை சிதறி, அதிக ரத்தம் வெளியேறியது. அந்த நேரத்தில், அவரது அருகில் படுத்திருந்த அவரது தாத்தா கோபால் சத்தம் கேட்டு விழித்தெழுந்தார். மர்ம கும்பல் அவரை கீழே தள்ளி விட்டது.
தடுமாறி கீழே விழுந்த அவர், காலில் காயம் அடைந்தார். அப்போது மர்ம கும்பல் தப்பி ஓடி விட்டது. இதற்கிடையில், சத்தம் கேட்டு விழித்தெழுந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். தங்கள் மகன் இறந்து கிடப்பதைக் கண்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். கார்த்திகேயனின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து, கார்த்திகேயனின் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? முன் விரோதம் ஏதேனும் இருந்ததா? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!