பெரும் அதிர்ச்சி.. சிறுத்தை தாக்கி இளைஞர் உயிரிழப்பு.. பீதியில் மக்கள்!
நீலகிரி மாவட்டம் ஆரையட்டி பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, புலி, மான் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் உள்ளதால், சமீப காலமாக சிறுத்தை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நடமாடுவது வாடிக்கையாக உள்ளது. குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மஞ்சூர் கிராம பகுதிகளில் தண்ணீர் தேடி அலைகின்றனர்.
இந்நிலையில் நேற்று (ஜன.3) மாலை தனியார் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை ஒன்று சதீஷ் என்ற இளைஞரை தாக்கியது. இதில், இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் சதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுத்தை தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேயிலை தோட்டத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால் யாரும் அப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!