பெரும் பதற்றம்.. முன்னாள் அதிபரை கைது செய்ய முயன்ற போது தடுத்து நிறுத்திய ஆதரவாளர்கள்!

 
தென் கொரியா

தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல், கடந்த ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தன. இதற்கான வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி தோற்கடிக்கப்பட்ட போதிலும் கடந்த 27ஆம் திகதி நடைபெற்ற வாக்கெடுப்பில் அவருக்கு எதிராக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தென்கொரிய அதிபர்

இதைத் தொடர்ந்து, ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதாக முன்னாள் அதிபர் யூன் சுக்-யோல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சியோல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோது, ​​கடந்த வாரம் யூன் சுக்-யோலைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவர் மீதான நீதிமன்ற நடவடிக்கையை பலரும் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், அவரைக் கைது செய்வதற்காக இன்று காலை யூன் சுக்-யோலின் வீட்டுக்கு போலீஸார் மற்றும் வழக்கறிஞர்கள் அடங்கிய கூட்டுப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் சென்றனர். ஆனால், அவரது ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன் திரண்டதால், அவரை கைது செய்ய விடாமல் தடுத்தனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், மேலும் பதற்றம் காரணமாக, யூன் சுக்-யோல் கைது செய்யப்படவில்லை.

 தென் கொரியா

புலனாய்வாளர்கள் யூன் சுக்-யோல்- ஐக் கைது செய்ய ஜனவரி 6 வரை அவகாசம் அளித்துள்ளனர், மேலும் அவர்கள் திரும்பி வந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது, மேலும் அவர்கள் இந்த வார இறுதிக்குள் மீண்டும் யூனைக் கைது செய்ய முயற்சி செய்யலாம். இருப்பினும், யோலின் ஆதரவாளர்கள் இதை தங்களுக்கு பெரும் சவாலாக மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவரான பார்க் சாங் டே, யோலை கைது செய்யுமாறு விசாரணைக் குழுவை வலியுறுத்தியுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web