இன்று நீட் தேர்வில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள்!

 
இன்று நீட் தேர்வில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள்!

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்களை படிக்க நீட் தேர்வு எழுத வேண்டியது கட்டாயம். அந்த வகையில் நடப்பாண்டிற்கான நீட் தேர்வு இன்று இந்தியா முழுவதும் நடத்தப்பட உள்ளது. கொரோனாவால் நீட் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படலாம் என்று இருந்த நிலையில் நிச்சயம் நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டு அதன்படியே இன்று நடைபெறுகிறது.

கொரோனா காரணமாக இவர்களுக்கான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 18 மையங்களில் நடத்தப்படுகிறது. ஆன்லைன் மூலம் இவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று நீட் தேர்வில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள்!

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, வேலூர், நெல்லை, திருப்பூர், சேலம், கடலூர், காஞ்சிபுரம், கரூர், நாகர்கோவில், நாமக்கல், தஞ்சாவூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 18 நகரங்களில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெறும்.

இன்று நீட் தேர்வில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள்!

இன்று நீட் தேர்வில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களுக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் ஏதும் இல்லை என்று உறுதி செய்து கையொப்பம் இட வேண்டும்.

இன்று நீட் தேர்வில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள்!

தேர்வு மையத்துக்குள் மொபைல் போன்கள், கால்குலேட்டர் போன்ற எந்தவிதமான மின்னணு பொருட்கள் கொண்டுவர அனுமதியில்லை.

முழுக்கை சட்டை, ஷூ, சாக்ஸ், நகைகள் அணிந்து வர அனுமதியில்லை.

சாதாரண செருப்புகள் மட்டுமே அணிந்து வர வேண்டும் .

முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.

தேர்வு மையங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

எழுது பொருட்களை ஒருவருக்கொருவர் மாற்றி கொள்ளக் கூடாது.

தேர்வு மையங்களில் புதிய என்.95 மாஸ்க் வழங்கப்படும்.

மாணவர்கள் ஹால்டிக்கெட், சானிடைசர் , குடிநீர் பாட்டில் கொண்டு வர அனுமதி வேண்டும்.

பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் தேர்வுக்கு 1.30க்கு பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web