ஷூ சைஸ் 22... உலகின் மிகப்பெரிய பாதங்கள்... கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்!
அமெரிக்காவில் மெக்சிகன் மாகாணத்தில் வசித்து வருபவர் 16 வயது எரிக் கில்பர்ன்.இவருக்கு உலகில் மிகப்பெரிய பாதங்கள் மற்றும் கைகளை கொண்ட டீன் ஏனேஜராக அறியப்படுகிறார். இதன் மூலம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இவரது கைகள் 9.13 அங்குலமும், கால்பாதங்கள் 13.50 அங்குலமும் உள்ளது. இந்த சாதனை, தனித்துவமான உடல் அமைப்பின் அடிப்படையில் உருவாகியுள்ளது. 5ம் வகுப்பிலிருந்து தனது காலணி சைஸ் கிடைக்கவில்லை என்கிறார் எரிக். இதனால் ஏற்பட்ட சவால்களை அவருக்கு நேரிட வேண்டியதில்லை என்பதையும் எரிக் தெரிவித்துள்ளார்.
Largest Hands and Feet On A Teenager https://t.co/CmCHcfBIf4
— Dina Maalai (@DinaMaalai) September 28, 2024
எரிக், தனது உடல் அளவுகளை சாதனைக்கும் மீறி, தனக்கென ஒரு சிறந்த அடையாளமாக மாற்றி, எதிர்மறை எண்ணங்களை வென்று தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தான் “தனியாக தெரிவதில் பிரச்சனையில்லை” எனக் கூறும் எரிக், அவரது சாதனை மூலம் மற்றவர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறார். அதே நேரத்தில் மக்கள் அவரைப் பார்க்கும்போது, அவரது மனம் மற்றும் தைரியத்தைப் பற்றி நினைக்க வேண்டும் என்பதையும் அவர் எப்போது பேசும் போதும் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய பாதங்களுக்கு சொந்தக்காரரான எரிக்கின் இந்த சாதனை என்ன நடந்தாலும் ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதற்கான ஒரு உதாரணமாக தான் இருப்பதாகக் கூறியுள்ளார். எரிக் கில்பர்னின் இந்த சாதனை, சாதாரணமாக தோன்றும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியத்தை மற்றவர்களுக்கு வழங்குகிறது. அவருக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!