கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு அரைகுறை ஏற்பாடுகளே காரணம்... மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம்!

 
கும்பமேளா


 உத்திரப்பிரதேச மாநிலத்தில் திரிவேணி சங்கமத்தில் ஜனவரி 13ம் தேதி முதல் மகா கும்பமேளா தொடங்கியுள்ளது. இந்த விழாவில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனடி மீட்பு நடவடிக்கைக்கு பிரதமர் மோடி உத்தரப்பிரதேச முதல்வருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இங்கு ஏற்பட்ட திடீர் கூட்டநெரிசலுக்கு அரைகுறை ஏற்பாடுகளே காரணம் எனறு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


அதன்படி இந்துக்களின் புனித  தலமாக கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி என மூன்று நதிகள் சங்கமமாகு திரிவேணி சங்கமம் கருதப்படுகிறது. இங்கு நடைபெறும் மகா கும்பமேளாவின் போது, குறிப்பாக மௌனி அமாவாசை போன்ற சிறப்பு நீராடுவர்.இந்த  நாட்களில் அதில் நீராடுவது மக்களின் பாவங்களை கழுவி, அவர்களுக்கு 'மோட்சம்' அல்லது முக்தியை அளிக்கும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில், மௌனி அமாவாசை நாளில்  மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அடுத்து 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் கும்பமேளா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கும்பமேளா
இந்நிலையில், மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்டநெரிசலுக்கு அரைகுறை ஏற்பாடுகளே காரணம் என்று காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  "மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி கேட்டு மனவேதனை அடைந்தேன். உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு அரைகுறை ஏற்பாடுகள், விஐபிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது, நிர்வாகத்தை விட சுய விளம்பரத்தில் அதிக கவனம் செலுத்துவது ஆகியவையே காரணம். பல கோடி ரூபாய் செலவு செய்து இவ்வளவு மோசமான ஏற்பாடுகள் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பக்தர்களின் அடிப்படை வசதிகளை உறுதி செய்து, மற்றுமோர் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யும்படி காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web